ராமநாதபுரத்தில் உட்கட்சி பூசல் காரணமாக திமுக நிர்வாகியை அவரது கட்சியை சார்ந்தவர்களே கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராமநாதபுரத்தில் திமுகவினர் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன் தலைமையில் ஒரு அணியும் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் ஒரு அணியும் என தனித் தனியே இயங்கி வருவதாக அறியப்படுவதால் அவ்வப்போது சலசலப்பு எழுகிறது. இந்தநிலையில், ராமநாதபுரம் மக்களவை தேர்தலில் வென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியின் நன்றி அறிவிப்பு கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த சுப.தங்கவேலன் ஆதரவாளரும் திமுக பொதுக்குழு உறுப்பினருமான ராஜா மற்றும் அவரது தரப்பினர், முத்துராமலிங்கத்தின் ஆதரவாளரான இன்பாரகு என்பவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றனர். இதில், பலத்த காயமடைந்த அவர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திமுக உட்கட்சி பூசலின் உச்சகட்டமாக கொலை முயற்சி சம்பவம் அரங்கேறி உள்ளதால், அப்பகுதி மக்கள் அக்கட்சியின் மீதும், நிர்வாகிகள் மீதும் அச்சத்தில் உள்ளனர்.
Discussion about this post