கர்நாடகாவில், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில், ஒரு எம்எல்ஏ மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ.க்களிடம் பாஜக குதிரை பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சையால், அக்கட்சி எம்எல்ஏ.க்கள் சிலர் ராமநகர் மாவட்டத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இதில் கடந்த 19 ஆம் தேதி, எம்எல்ஏ.க்கள் ஆனந்த் சிங், கணேஷ் ஆகியோர் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆனந்த் சிங் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எம்எல்ஏ கணேஷ், தம்மை அடித்து உதைத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்திருக்கிறார். அதனடிப்படையில், கணேஷ் மீது கொலை முயற்சி உள்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post