சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர் என்பவரின் 8 வயது மகன் முகில் கிருஷ்ணன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டெங்கு காய்ச்சல் காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். டெங்கு காய்ச்சல் ஆரம்ப நிலையில் இருந்ததால் மருத்துவர்களின் சிகிச்சையில் சிறுவன் 2 நாட்களில் குணமாகி வீட்டிற்கு திரும்பியுள்ளான்.
இந்த நிலையில், சிறுவனின் வீட்டிற்கு சென்று, சென்னை மாநகராட்சி ஊழியர்கள், நிலவேம்பு கசாயம் கொடுத்துள்ளனர். இதனை பயன்படுத்திக் கொண்ட திமுகவினர், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திமுக சார்பில் சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெ. அன்பழகன் அறிவுறுத்துதலின் பெயரில், சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நுங்கை சுரேஷ் தலைமையில் நிலவேம்பு கசாயம், பப்பாளி சாறு மற்றும் பழவகைகள் கொடுத்ததாக முரசொலி நாளிதழில் புகைப்படத்துடன் கடந்த 24 ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, நுங்கம்பாக்கம் பகுதி பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி ஊழியர்களை அழைத்து வந்து சாலைகளில் தேங்கிய நீரினை அகற்றுதல் உள்ளிட்ட பொது சுகாதாரப்பணிகளை மேற்கொண்டதாகவும், சிறுவன் முகில் கிருஷ்ணன் டெங்குவினால் பலியானதால், பொதுமக்களும் பாதிக்காத வகையில் இந்த பணிகளை மேற்கொண்டதாக திமுகவினர் முரசொலியில் செய்தி வெளியிட்டனர்.
முகில் கிருஷ்ணன் இறந்ததாக முரசொலியில் வெளியான செய்தியைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சிறுவனின் தந்தை ரவிசங்கர் அதிமுக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் வி.எம். ராஜனிடம் தகவலை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரவிசங்கர், வி.எம். ராஜன் ஆகியோர் திமுகவின் பத்திரிகையான முரசொலி, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளதாக காவல் நிலையத்தில், புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றம் செய்தனர். தற்போது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இரண்டு நாட்களில் தனது மகன் குணமடைந்ததாகவும், முரசொலி நாளிதழில் தன் மகன் இறந்ததாக வெளிவந்த செய்தி எங்களுக்கு மிகவும் மனவருத்தத்தை அளிப்பதாகவும் ரவி சங்கர் கூறினார்.
மாநாகராட்சி ஊழியர்களின் பணியை தாங்கள் செய்ததாக பொய் கூறும் திமுகவினர் அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டது கண்டிக்கத்தக்கது என்று அதிமுக மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் வி. எம்.ராஜன் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியை குறை சொல்லும் நோக்கில் திமுகவினர் தொடர்ந்து பரப்பி வரும் அவதூறு செய்திகளில், ஆயிரத்தில் இதுவும் ஒன்று.
Discussion about this post