கனமழையால் சேதமடைந்த பெரியாவரை பாலம் சரி செய்யப்பட்டதால் மூணாறு- உடுமலை இடையேயான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது…
கேரளா பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மூணாறு பகுதியில் உள்ள பெரியாவரை பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.இதனால் அப்பகுதி மக்கள் அவதிகுள்ளாகினர்.தற்காலிக பாலம் அமைத்து போக்குவரத்தை தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் மூலம் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் மூணாறு-உடுமலை இடையேயான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.மேலும் தற்காலிக பாலத்தில் கனராக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் பாதுகாப்பு காரணமாக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்…
Discussion about this post