வரையாடுகளின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டு மூணாறு தேசிய பூங்கா இன்று முதல் மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான இறவிகுளம் தேசிய பூங்கா இன்று முதல் மூடப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. ராஜமலை பகுதியில் அமைந்துள்ள இறவிகுளம் தேசிய பூங்காவில், காஷ்மீருக்கு அடுத்த படியாக 600க்கும் மேற்பட்ட அரியவகை வரையாடுகள் உள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரம் மாதம் வரை வரையாடுகளின் இனப்பெருக்க காலம் என்பதால் இறவிகுளம் தேசிய பூங்கா மூடப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் பூங்கா மூடப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு வரையாடுகள் 104 குட்டிகள் ஈன்றதாக வனத்துறை அதிகாரி லட்சுமி தெரிவித்துள்ளார்.
Discussion about this post