சென்னையில் குப்பை அள்ளும் பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் மாநகராட்சியின் முடிவை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் சார்பில் நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள குப்பைகளை அள்ளுவது, சாலையோர விளக்குகளை பராமரிப்பது, மலேரியா கொசுக்களை ஒழிப்பது உள்ளிட்ட 7 பணிகளில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குப்பை அள்ளும் பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. மாநராட்சி நிர்வாகத்தின் இந்த முடிவை கண்டித்தும், மாற்றுப்பணி வழங்க கோரியும் துப்புரவு பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பணி பாதுகாப்பு மற்றும் மாற்றுப்பணி வழங்க மாநகராட்சி நிர்வாகம் ஒப்புக்கொண்டதால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. குப்பைகள் அள்ளும் பணி டிசம்பர் 7-ம் தேதி முதல் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்று காலை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post