13-வது ஐ.பி.எல். தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இன்றைய 17-வது லீக் ஆட்டத்தில் மும்பை – ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ரோஹித், டிகாக் இணை அணிக்கு தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரில் சந்தீப் ஷர்மா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோஹித். டிகாக்குடன் சூர்யா குமார்யாதவ் கைக்கோரத்தார். 18 பந்துகளில் 27 ரன்களைச்சேர்ந்த சூர்யகுமார்யாதவ் 5 ஓவரில் அவுட்டாக 2 விக்கெட்டுக்கு 48 ரன்களை சேர்த்திருந்தது மும்பை.
தடுமாற்றத்துடன் காணப்பட்ட மும்பை அணியை இஷான் கிஷன், டிகாக் இணை உத்வேகம் அளித்தது. இருவரும் இணைந்து பந்துளை பவுண்டரி நோக்கி விரட்ட 14-வது ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 134 ரன்களைச் சேர்த்தது மும்பை அணி. 38 பந்துகளில் 67 ரன்களை சேர்த்து அதிரடியாக ஆடிய டிகாக் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஓரளவு தங்கள் பேட்டிங்கில் நியாயம் சேர்க்க 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 208 ரன்களைச் சேர்த்தது மும்பை இந்தியன்ஸ்.
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் முதல் விக்கெட்டுக்கு 34 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியின் டேவிட் வார்னரைத் தவிர, மற்ற யாரும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. 20 ஓவர் முடிவில் 174 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியைத்தழுவியது ஹைதராபாத்.
Discussion about this post