முகலாயத் தோட்டத்திற்கு ‘அம்ரித் உதயன்’ என்று பெயர்சூட்டிய குடியரசுத் தலைவர்!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையின் முகல் கார்டன் என அழைக்கப்படும் முகலாயத் தோட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்பு ‘அம்ரித் உதயன்’ என்று பெயர் சூட்டியுள்ளார். இது சுதந்திர இந்தியாவின் அமிர்தகால கொண்டாட்டத்திற்கான முக்கிய நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் கடந்த நிலையில் அதனை கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி அவர்கள் இந்த 75கால சுதந்திரத்தினை அமிர்தகால கொண்ட்டாட்டமாக கொண்டாடுங்கள் என்று பேசியிருந்தார். அதனையொட்டி இந்த பெயர்சூட்டும் அறிவிப்பினை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்பு செய்துள்ளார்.

இந்தத் தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து மார்ச் 26ஆம் தேதி வரை கிட்டத்தட்ட இரண்டு மாதம் கணக்கில் திறக்கப்பட உள்ளது. மேலும் பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கென தனி வசதிகள் ஒதுக்கம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்ரித் உதயன் தோட்டமானது 15 ஏக்கர் அளவில் உள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீரின் முகலாயர் தோட்டம், தாஜ்மகாலின் தோட்டங்கள், பெர்ஷியாவின் மினியேச்சர் ஓவியங்களின் தாக்கத்தில் இந்த அம்ரித் உதயன் தோட்டமானது கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தினை கடந்த 1927-ம் ஆண்டு தொடக்கத்தில் சர் எட்வின் லுட்யின்ஸ்  வடிவம் செய்தார். ஆனாலும், 1928 – 29 காலக்கட்டங்களில்தான் தோட்டம் உருவாக்கப்பட்டது. லுட்யின் தோட்டக்கலை நிபுணர் வில்லியம் முஸ்டோனுடன் இணைந்து இதனை உருவாக்கியது இன்னொரு சிறப்பு

இதனையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தி தொடர்பாளரின் கருத்துப்படி, அமிர்த காலத்தில் அடிமை மனப்பான்மையிலிருந்து வெளியே வருவது மிகவும் முக்கியமானதாகும். முக்கியமாக முகல் தோட்டம் அம்ரித் உதயன் தோட்டம் என்று அமைக்கப்பட்டுள்ளது மிகவும் குறிப்பிடதக்க நிகழ்வாகும் என்று கூறியுள்ளார்.

Exit mobile version