முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் செல்லும்படி வனத்துறை எச்சரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் காணப்படுகின்றன. 2013ம் ஆண்டு முதல் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை காண அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த 2 மாதமாக பெய்த கனமழையால் வனப்பகுதி முழுவதும் பசுமையுடன் காட்சியளிக்கிறது. இதையடுத்து, மாலை நேரங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையில் உலா வருவதால் இதனை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யாமல் சாலையில் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post