எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆராய்ச்சி நிறுவனத்தின் தன்னலமற்ற சேவையால், தமிழக வேளாண்துறை வளர்ச்சி பெற்றுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தின் 30-ஆம் ஆண்டு விழா மற்றும் வளங்குன்றா வளர்ச்சிக்கான குறிக்கோள் மற்றும் பருவநிலை மீட்சிக்கான அறிவியலை பலப்படுத்துவதற்கான மூன்று நாள் கருத்தரங்கம் சென்னை தரமணியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், எம்.எஸ் சுவாமிநாதனின் ஆராய்ச்சி நிறுவனத்தின் தன்னலமற்ற சேவையால், தமிழகம் வேளாண் துறையில் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுள்ளதாக தெரிவித்தார். உலகம் போற்றும் விஞ்ஞானியாகத் திகழும் எம்.எஸ் சுவாமிநாதன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமிதம் கொள்வதாக முதலமைச்சர் அப்போது கூறினார்.
Discussion about this post