இந்திய அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஒரு சாதனையாளர் என்று ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது விக்கெட் கீப்பராக இருப்பவர் தோனி. கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. இதனால், அவரது ஓய்வு குறித்த செய்திகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. சமீபத்தில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி, தன்னுடைய எதிர்கால திட்டம் உள்ளிட்ட எந்தவொரு கேள்விளையும், ஜனவரி மாதம் வரை கேட்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தோனி குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில், எம்எஸ் தோனி ஒரு சாதனையாளர். அப்படி இருக்கும் போது எப்படி தன்னை இந்திய அணியில் திணித்துக் கொள்வார் என்று ரவிசாஸ்திரி குறிப்பிட்டார். தோனி தற்போது ஓய்வை விரும்பி வருகிறார். வரும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற பிறகு, இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று நினைத்தால் அவர் கண்டிப்பாக விளையாடுவார் என்று ரவிசாஸ்திரி தெரிவித்தார். அதுவரை தோனி தொடர்பான தனிப்பட்ட சொந்த கருத்துக்களை கூற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
முன்னதாக தோனி ஓய்வு விஷயத்தில் ஐ.பி.எல். போட்டி முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று ரவிசாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post