இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பாரதிய ஜனதா கட்சி மக்களவை தேர்தலில் களம் இறக்க இருப்பதாக வெளியான செய்தி தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிரடியான ஆட்டம் மற்றும் சிறப்பான தலைமை பண்பினால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களை வென்றவர் மகேந்திர சிங் தோனி. குறிப்பாக இவருக்கு தென்னிந்தியாவில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்தநிலையில் வரும் மக்களவை தேர்தலில் தோனி மற்றும் காம்பீரை களம் இறக்கும் முயற்சியில் பா.ஜ.க இறங்கி இருப்பதாக தி சண்டே கார்டியன் என்னும் ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எம்.ஜே.அக்பர் 2010 முதல் 2014-ம் ஆண்டு வரை தி சண்டே கார்டியனின் ஆசிரியராக பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post