முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மறைவுக்கு, சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடியதும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நல்லப்பன், வடிவேலு, ஜெனிபர் சந்திரன், உசேன், சு.சுப்பிரமணியம், முரளிதரன், அழகராஜா, நாராயணன், சின்னப்பன், சுப்பிரமணியன், பாலசுந்தரம், தேவராஜன், சக்திவேல் முருகன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியனின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிறகு சட்டப்பேரவை கூட்டம் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
Discussion about this post