தமிழகத்தில் தாய் -சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது

2012ம் ஆண்டில் இருந்து தற்போது வரை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் மூலம் 56 லட்சம் கர்ப்பிணிகளுக்கு 4 ஆயிரத்து 860 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய்சேய் நலப் பரிசு பெட்டகம் மற்றும் மருத்துவர்கள், இதர அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை, செவிலியர்களுக்கு கையடக்கக் கணினி, இணையதளம் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம், மற்றும் ஆய்வகத் தகவல் மேலாண்மை போன்றவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இதுவரை 28 லட்சத்து 70 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும் அரசின் உயர்தர சிகிச்சையின் காரணமாக தமிழகத்தில் தாய் மற்றும் சேய் இறப்பு விதிகம் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 2012 முதல் தற்போது வரை முத்துலட்சுமி ரெட்டி திட்டம் மூலம் 56 லட்சத்து 36 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு 4 ஆயிரத்து 860 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், தாய் சேய் நல மருத்துவமனையின் 175ம் ஆண்டை முன்னிட்டு 15 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படும் என்ற அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டார்

Exit mobile version