வால்பாறையில் பெரும்பாலான மக்கள் நலப்பணிகள் அதிமுக அரசில் செய்யப்பட்டவை என உள்ளாட்சித்துறைஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவை மாவட்டம், வால்பாறையில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு இல்லம் மற்றும் ஏழைகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு, திட்டங்களை துவக்கி வைத்தார். இதையடுத்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வால்பாறையில் விடுபட்ட சாலைகள் இணைப்பு உட்பட பெரும்பாலான திட்டங்கள் அதிமுக அரசில் செய்யப்பட்டவை என பெருமிதம் தெரிவித்தார்.
Discussion about this post