தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பெற்றுத்தரக் கோரி சென்னை செபி அலுவலகம் முன்பு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு பிஎசிஎல் என்ற தனியார் காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 6 கோடிக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பிஏசிஎல் நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டு முன்னறிவிப்பின்றி திடீரென மூடப்பட்டது. இது தொடர்பான வழக்கில் பிஏசிஎல் நிறுவனம், தனது சொத்துக்களை விற்று 6 மாதங்களுக்குள் முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், 40 மாதங்களை கடந்தும் முதலீட்டுத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், பணத்தை விரைவாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை அண்ணாசாலையில் உள்ள செபி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Discussion about this post