சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 622ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 ஆயிரத்து 645 பேர் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 2 ஆயிரத்து 211 பேர் ஆண்கள் என்றும் ஆயிரத்து 434 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சென்னையை பொருத்தவரையில் ஒரே நாளில் ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த பாதிப்பு 49 ஆயிரத்து 690ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 24 ஆயிரத்து 932 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 305ஆக உள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 357ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஆயிரத்து 358 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்த சதவிகிதம் 55 புள்ளி 42ஆக உள்ளது. பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 232 பேரும், மதுரையில் 194 பேரும், திருவள்ளூரில் 177 பேரும், வேலூரில் 148 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று திருவண்ணாமலையில் 70 பேருக்கும், வேலூரில் 149 பேருக்கும், தூத்துக்குடியில் 37 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Discussion about this post