தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய 151 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. புதிதாக கொரோனா பாதித்த 3 ஆயிரத்து 509 பேரில், 2 ஆயிரத்து 157 பேர் ஆண்கள், ஆயிரத்து 352 பேர் பெண்கள். சென்னையில் ஆயிரத்து 834 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 47 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் 204 பேருக்கும், செங்கல்பட்டில் 191 பேருக்கும், வேலூரில் 172 பேருக்கும், திருவள்ளூரில் 170 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் 140 பேரும், காஞ்சிபுரத்தில் 98 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தேனியில் 72 பேருக்கும், சேலத்தில் 89 பேருக்கும், திருவண்ணாமலையில் 55 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் ஆயிரத்து 675 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 2 ஆயிரத்து 236 பேர் மீண்டதையடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 999 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், குணமடைந்தோர் சதவீதம் 56 புள்ளி 35 ஆக உள்ளது. 30 ஆயிரத்து 64 பேர் சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 32 ஆயிரத்து 543 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 45 பேர் உயிரிழந்ததால், பலியானவர்களின் எண்ணிக்கை 911ஆக அதிகரித்துள்ளது.
Discussion about this post