கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் வேளையில், கும்பமேளாவை ஆட்களின்றி நடத்தி முடிக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டிருந்த நிலையில், பக்தர்கள் கூட்டமாக வரவேண்டாம் என துறவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா கடந்த ஏப்ரல் 1ம் தேதி துவங்கியது. கும்பமேளாவில் பங்கேற்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், லட்சக்கணக்கானோர் வருகை தந்ததால், மாவட்ட நிர்வாகம் திணறியது. கடந்த 5 நாட்களில் மட்டும், ஹரித்வாரில் சுமார் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில் கும்பமேளாவை ஆட்களின்றி நடத்தி முடிக்குமாறு, கும்பமேளாவை நடத்தும் ஜூனா அகாதா அமைப்பை கேட்டுக் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் தலைவர் அவ்தேஷ் ஆனந்திடம் இது குறித்து தொலைபேசியில் உரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post