தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பு 67 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய 91 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. புதிதாக கொரோனா பாதித்த 2,865 பேரில், ஆயிரத்து 781 பேர் ஆண்கள், ஆயிரத்து 84 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post