ஹஜ் பயணம் மேற்கொள்ள கூடுதலாக 25 ஆயிரம் இந்தியர்களுக்கு அனுமதி வழங்கி சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் சவுதி 10 லட்சம் மக்கள் தொகைக்கு ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கி வந்தது. இதன்படி கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு சவுதி அரசு வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையை 20 சதவீதம் குறைத்ததை தொடர்ந்து இந்திய பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தது. எனினும் அடுத்தடுத்த வருடங்களில் இந்தியர்களுக்கான அனுமதி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த வருடம் கூடுதலாக 25 ஆயிரம் பேருக்கு சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தினால் வரும் காலங்களில் 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post