இந்திய ராணுவத்திற்கு எதிராக பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கமாண்டோக்களை நிறுத்தியுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
பாகிஸ்தானின் எல்லை பகுதியான சர் க்ரீக் பகுதியில் கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத குழுவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் பாகிஸ்தான் கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறிய இந்திய ராணுவ அதிகாரிகள், பாகிஸ்தான் ராணுவம் தொடர் எல்லை அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினர். அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம், தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இதனிடையே, காஷ்மீரின் யூரி பகுதியிலுள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பதிலடியை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் பின் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
Discussion about this post