மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்ட நோயாளிகளை, ஆம்புலன்சில் அடைத்து சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்ற சுகாதாரத்துறையின் நடவடிக்கை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் அருகேயுள்ள பொன்னமங்கலத்தில், கொரோனா பெருந்தொற்றால் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, கிராம மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து, தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவித்த சுகாதாரத் துறையினர், பாதிக்கப்பட்ட நோயாளிகளை சிகிச்சை மையத்துக்கு அழைத்து செல்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து, கிராம மக்களே, தன்னார்வல அமைப்பு மூலம் 2 ஆம்புலன்சுகளை ஏற்பாடு செய்தனர்.
அதன் பின்னர், ஒரே ஆம்புலன்சில் பத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை ஏற்றி, கொரோனா சிகிச்சை மையத்துக்கு சுகாரத்துறையினர் அனுப்பி வைத்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Discussion about this post