இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைக்கான காப்புரிமைத் தொகைக்கு அமெரிக்காவின் மான்சான்ட்டோ நிறுவனம் உரிமை கோரலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைக்கான காப்புரிமை தொகைக்கு அமெரிக்காவின் மான்சான்ட்டோ நிறுவனம் உரிமை கோர முடியாது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால் 2015-ம் ஆண்டு அந்த நிறுவனம், இந்தியாவின் நுழிவீடு லிட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைக்கான, காப்புரிமைத் தொகைக்கு அமெரிக்காவின் மான்சான்ட்டோ நிறுவனம் உரிமை கோரலாம் என உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post