ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த பக்தரிடம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
பீகாரைச் சேர்ந்த அஜித் குமார் குப்தா என்பவர் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வருகை தந்துள்ளார். அக்னி தீர்த்தக்கடலில் நீராடுவதற்காக நின்று கொண்டிருந்த போது, அருகில் இருந்த திருடன் ஒருவன் 10 ரூபாயை கீழே போட்டு, அஜித் குமாரிடம் பணம் கீழே கிடப்பதாக கூறியுள்ளார். உடனே அஜித் குமாரும் அந்தப் பணத்தை எடுப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது தயாராக இருந்த மற்றொரு நபர் அஜித் வைத்திருந்த, 11/2 லட்சத்துடன் கூடிய பணப்பையை திருடி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமானார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியது. இதனை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் திருடிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post