வங்கி கடன் வாங்கி தருவதாக ராணுவ வீரரிடம் ஏமாற்றிய பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டகுப்பத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். ஜம்மு காஷ்மீர் ரஜோரியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 3 லட்சம் ரூபாய் லோன் பெற்றுத்தருவதாகவும் , அதற்காக 35 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்றும் சரவண குமாருக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதை நம்பிய அவரும் பணத்தை கட்டியுள்ளார்.
பின்னர் அந்த எண் அணைத்து வைக்கப்பட்டது. இது தொடர்பாக சரவணக்குமார் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த மோசடி தொடர்பாக கார்த்திக், சத்தியநாராயணன், கனிமொழி ஆகியோரை கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்
தலைமறைவாக உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் ஆறுமுகத்தை போலீசார் தேடிவருகின்றனர்.
Discussion about this post