பட்டப்பகலில் நிதி நிறுவன அதிபரிடம் நூதன முறையில் ஐந்து லட்சம் பணம் கொள்ளையடிக்கபட்டுள்ளது.
மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தை நடத்திவரும் சீனிவாசன் என்பவரிடம், வட மாநிலத்தைச்சேர்ந்த 2 இளைஞர்கள், தாய்க்கு மருத்துவம் பார்க்க பணம் தேவையிருப்பதால், 10 லட்சம் மதிப்பிலான தங்க நகையை வைத்துக்கொண்டு 5 லட்சம் ரொக்க பணம் தருமாறு கேட்டுள்ளனர். அதனை நம்பி பணத்தை எடுத்துக்கொண்டு வந்த நிதி நிறுவன அதிபரை, அரசு மருத்துவமனை வாசல் அருகே வட மாநிலத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள், தாக்கிவிட்டு பையில் வைத்திருந்த, 5 லட்சம் ரொக்க பணத்தை பறித்து கொண்டு தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினார் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
Discussion about this post