நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், அச்சு மற்றும் உருண்டை வெல்லங்களில் கலப்படம் செய்த இரண்டு வெல்ல உற்பத்தி ஆலைகளுக்கு, அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
பரமத்திவேலூர் அருகேயுள்ள பிலிக்கல்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 400க்கும் மேற்பட்ட வெல்ல உற்பத்தி ஆலைகள் உள்ளன. இங்கு அச்சு, உருண்டை வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை தயாரிக்கப்படுகிறன. இவ்வாறு தயாரிக்கப்படும் வெல்லங்களில் கூடுதல் சுவை மற்றும் நிறத்திற்காக, வெள்ளை சர்க்கரை மற்றும் ரசாயனங்கள் கலப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, நாமக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், வெல்ல உற்பத்தி ஆலைகளில் சோதனை நடத்தியதில், பிலிக்கல்பாளையத்தில் உள்ள ஆலையில், 2 ஆயிரத்து 400 கிலோ கலப்பட வெல்லம் மற்றும் 62 கிலோ சர்க்கரையை பறிமுதல் செய்தனர். இதேபோல், சாமிநாதபுரத்தில் உள்ள ஒரு ஆலையில், ஆயிரத்து 750 கிலோ கலப்பட வெல்லத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், ஆலைகளுக்கு சீல் வைத்தனர்.
Discussion about this post