நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கக் கூடாது என அவர்களுக்கு பலரும் உதவி வருகின்றனர். அதில் ஒருவர்தான் கமலாத்தாள் பாட்டி. இவரின் சேவை பற்றி அறிந்த கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், கமலாத்தாள் பாட்டியை பாராட்டி, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 85 வயதான கமலாத்தாள் பாட்டி, கடந்த 30 வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார் என்றும், ஊரடங்கு காலத்திலும் பல்வேறு வெளி மாநில தொழிலாளர்களுக்காக அவர் இந்த சேவையை தொடர்ந்து செய்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் அவரின் தன்னலமற்ற சேவை உணர்வு உத்வேகம் அளிக்கிறது எனவும் பாராட்டியுள்ளார்.
Discussion about this post