ரபேல் விமான பேர ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியே எஜெண்டாக இருக்கும் போது இன்னோரு இடைத்தரகர் எதற்கு என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
ரபேல் விமான பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.ஆனால் காங்கிரஸ் பொய் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகவும் இந்த விசயத்தில் எந்த ஒரு இடைத்தரகரும் இல்லையெனவும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.காங்கிரஸ் கட்சிதான் போபர்ஸ் வங்கி குத்ரோச்சி போன்ற இடைத்தரகர்களை வைத்து கொண்டதாக பிரதமர் மோடி ரேபரேலியில் நடந்த கூட்டத்தில் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா, போபர்ஸ் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரித்ததை மோடிக்கு நினைவு படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். ரபேல் பேர விவகாரத்தில் பிரதமர் மோடியே ஒரு ஏஜெண்டாக செயல்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். ஒப்பந்தத்தில் கடைசி நேர மாற்றங்களுக்கு அவரே பொறுப்பு என்றும் ஆனந்த சர்மா கூறினார்.
Discussion about this post