ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது ஆகியோரைச் சந்தித்து பேசினார்.
ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டுக்கு வந்துள்ள ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயைச் சந்தித்துப் பேசினார். அதன்பின் இரு நாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சு நடைபெற்றது. இந்தப் பேச்சின் முடிவில், இந்தியா – ஜப்பான் இடையில் தொழில், வணிகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
Discussion about this post