ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற உள்ள யோகா தின கொண்டாட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகா கலையின் மேன்மை பற்றி விளக்கினார். சர்வதேச யோகா தினத்தை அறிவித்து, அதனை கொண்டாட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என ஐ.நா. சபை அறிவித்தது.
அதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி முதல், யோகா தினம் ஆண்டுதோறும் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 21ஆம் தேதி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். அவரது தலைமையில் 30 ஆயிரம் பேர் திரண்டு வந்து யோகா பயிற்சி செய்ய உள்ளனர். இதேபோன்று தலைநகர் டெல்லியில் ராஜபாதையில் யோகா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை டெல்லி மாநகராட்சியும், ஆயுஷ் அமைச்சகமும் இணைந்து செய்து வருகின்றன.
Discussion about this post