ஜனநாயக நாட்டை சரியான முறையில் ஆளக் கூடிய வல்லமை படைத்தவர் மோடி மட்டுமே என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் வட இந்தியர்கள் வாழக்கூடிய முனிச்சாலை பகுதியில் அவர்களுடைய சங்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு, மதுரை பாராளுமன்ற வேட்பாளர் ராஜ்சத்யனுக்கு , அமைச்சர் வாக்கு சேகரித்தார். பின்னர் வட இந்தியர்கள் கொண்டாடக்கூடிய ஹோலி பண்டிகையில் பங்கேற்று அவர்களுடன் தாண்டியா நடனம் ஆடி ஆதரவு திரட்டினார்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மதுரை பாராளுமன்ற வேட்பாளர் ராஜ சத்யன் மற்றும் திரளான கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
Discussion about this post