இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
324 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர தொடங்கி வைத்தார். இதனையடுத்து பீகாரின் மோத்திஹரியில் இருந்து நேபாளத்தில் உள்ள அம்லேக்கஞ்ச் நகருக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பி வைக்கப்படுகிறது. தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக குழாய் மூலம் மற்றொரு நாட்டிற்கு பெட்ரோல் அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 69 கிலோ மீட்டர் தூரத்திற்கு 15 மாதங்களில் குழாய்கள் அமைக்கப்பட்டது. இவற்றின் மூலம் மணிக்கு 2 லட்சம் லிட்டர் எரிபொருள் கொண்டு செல்லப்படும். இந்த திட்டத்தினால், நேபாளத்தின் எரிபொருள் தேவை பெருமளவில் நிறைவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post