மிசோரம் முதலமைச்சராக பதவியேற்றுள்ள மிசோ தேசிய முன்னணியின் தலைவர் சோரம் தாங்காவிற்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலம் மிசோரமில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், மொத்தமுள்ள 40 இடங்களில் 26 தொகுதிகளை மிசோ தேசிய முன்னணி கைப்பற்றியது.
இதனையடுத்து, சோரம் தங்கா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து 11 அமைச்சர்களும் பதவியேற்றனர். 3 வது முறையாக பதவியேற்ற சோரம் தாங்காவிற்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், சிறந்த முறையில் ஆட்சி செய்ய வாழ்த்துவதாகவும், மக்களின் தேவையை அறிந்து நாட்டின் வளர்ச்சியை நோக்கி செயல்படுவோம் என்றும், பதிவிட்டுள்ளார்.
Discussion about this post