அருணாச்சல பிரதேசத்தில் சவுபாக்கியா திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பங்களுக்கும் மின்வசதி கிடைக்க மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களில் இரண்டு நாள் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு, அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ஹொலங்கியில் கட்டப்படவுள்ள பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சவுபாக்கியா திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பங்களுக்கும் மின்வசதி கிடைத்துள்ளதாகவும், இதற்கு காரணமான அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா கண்டுவை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post