3 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி வரும் 16ம் தேதி வங்கதேசம் செல்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி வங்கதேச பயணம் குறித்து அந்நாட்டில் வெளியாகும் “டாக்கா ட்ரைபன்” என்ற ஆங்கில செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரதமர் வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை அந்நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது, இருநாட்டு உறவுகள் குறித்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் ஆலோசனை நடத்துகிறார். வரும் 17ம் தேதி நடைபெறும் ஷேக் முஜிபுர் ரகுமானின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார். பிரதமர் மோடியின் பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் இம்மாதம் முதல் வாரத்தில் வங்கதேசத்தில் பயணம் மேற்கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக, செய்தி வெளியிட்டுள்ளது.
Discussion about this post