மொபைல் நம்பரை வைத்து இன்டர்நெட் இல்லாமல் ட்விட் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை வைரலாக்குவதில் ட்விட்டரின் பங்கு இன்றியமையாதது. ஹேஸ்டேக் மட்டுமே போதும் ஒரு நிகழ்வை இருந்த இடத்திலே இருந்து உலகம் முழுவதும் ட்ரெண்ட் செய்யலாம். அதனால் தான் அனைத்து பிரபலங்களும் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர்.
ட்விட்டரில் நாம் ட்விட்கள் பதிவிடுவதற்கு இதுவரை இன்டர்நெட் தேவைப்பட்டது. ஆனால் தற்போது அது அவசியமில்லை. வெறும் மொபைல் நம்பர் கொண்டு நாம் ட்விட் செய்யலாம்.
அதற்கு ஒன்றே ஒன்று தான் நாம் செய்ய வேண்டும். முதலில் நமது ட்விட்டர் அக்கவுண்டுடன் நம் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும். அப்படி இணைக்கும் பட்சத்தில் மொபைலில் இருந்து 9248948837 என்கிற எண்ணுக்கு மெசெஜ் செய்தால் அது தானாகவே நம் அக்கவுண்டில் ட்விட்டாகி விடும்.
ஆனால் நீங்கள் ட்விட்டரில் எந்த நம்பரோடு லிங்க் செய்துள்ளீர்களோ அதில் இருந்து மட்டுமே ட்விட் செய்ய முடியும். மேலும் இது இன்டர்நெட் இல்லாத சமயங்களில் மட்டுமே பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post