சட்டப்பேரவையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதற்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், கருணாநிதியின் மறைவையொட்டி, இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், அவரது பெருமையைப் போற்றிய முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். பேரவையில் நிறைவேறிய இரங்கல் தீர்மான நிகழ்வு, தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுவிட்டதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Discussion about this post