முழு சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டதாக சொல்வதா என முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பருக்கு பெண் பத்திரிகையாளர் பல்லவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் சிலர் METOO ஹேஷ்டேக் மூலம் பாலியல் பலாத்கார புகார்களை தெரிவித்தனர். இதனால் அவர் தனது பதவியை இழக்க நேரிட்டது. இதனிடையே ஏசியன் ஏஜ் பத்திரிகையில் எம்.ஜே.அக்பர் பணியாற்றிய போது சக ஊழியர் பல்லவி கோகோய் என்பவரை பாலியல் வன்முறை செய்ததாக மீண்டும் புகார் எழுந்தது. தற்போது அமெரிக்காவில் பணியற்றும் பல்லவி,இதுதொடர்பாக எழுதிய கட்டுரையில் எம்.ஜே. அக்பரை கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.
பல்லவியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த எம்.ஜே.அக்பர், இது இரு தரப்பு சம்மதத்துடன் நடந்த உறவு என தெரிவித்திருந்தார்.
எம்.ஜே.அக்பரின் இந்த கருத்துக்கு, பல்லவி கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள பல்லவி, அக்பர் கூறியது முழுப்பொய் என தெரிவித்துள்ளார். அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல் வன்முறை செய்ததாக மீண்டும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Discussion about this post