பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் எம்.ஜே.அக்பர் மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பதற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
67 வயதாகும் எம்.ஜே.அக்பர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 2016-ம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். சமீபத்தில் அவர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் குவிந்தன. இதனால் மத்திய பா.ஜ.க அரசுக்கு கடும் நெருக்கடி உருவானது.
இதனிடையே முதலில் பதவியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை என கூறிய எம்.ஜே.அக்பர், நேற்றையதினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது முடிவுக்கு முதலில் தனது புகாரை வெளிப்படையாக கூறிய பத்திரிகையாளர் பிரியா ரமணி உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Discussion about this post