நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவித் தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
புஹுசாங்-3 எனப்படும் நீர்மூழ்கி ஏவுகணை, வடகொரியாவில் வோன்சன் நகருக்கு அருகே கடற்பகுதியில் சோதித்துப் பார்க்கப்பட்டதைத் தென்கொரிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அச்சுறுத்தல்களை முறியடிக்கவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா கூறியுள்ளது. 2018ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தொடங்கிய பிறகு, வடகொரியா மேற்கொண்ட இச்சோதனை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத வலிமையைப் பெருக்குவதை உணர்த்தும் வகையிலேயே வடகொரியா தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நீர்மூழ்கி ஏவுகணை சோதனையை நடத்திய விஞ்ஞானிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், வாழ்த்து அனுப்பியுள்ளதாக வடகொரிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post