பஞ்சாயத்து தலைவர்கள் தனி தனியாக தாக்கல் செய்த மனுவில், நாகுடி பஞ்சாயத்துக்குட்பட்ட பொது நிதியை போலி கையெழுத்திட்டு 50 லட்ச ரூபாய் நிதி முறைகேடு செய்துள்ள கிராம பஞ்சாயத்து செயலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு அளித்த நிலையில், பஞ்சாயத்து செயலர் மீது நடவடிக்கை எடுக்காமல், பஞ்சாயத்து கணக்கு வழக்குகளை சரிவர பராமரிக்கவில்லை எனக் கூறி ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் தன்னை பதவிநீக்கம் செய்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதே போல் மடங்குடி பஞ்சாயத்து தலைவர் லதாவை பதவி நீக்கம் செய்து ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் பஞ்சாயத்து தலைவர் செல்வி மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரணை செய்த
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை இயக்குநர் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
Discussion about this post