வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள புதினா மூலம் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டையை அடுத்த பள்ளேரி கிராமத்தில் வசித்துவரும் குருசாமி என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இயற்கை முறையில் புதினா சாகுபடி மேற்கொண்டுள்ளார். இந்த சாகுபடியில் 200 நாட்களில் நான்கு முறை அறுவடை செய்து, செலவுகள் போக, ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் வரை லாபம் கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புதினா சாகுபடிக்கு குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுவதாகவும், வறட்சி காலங்களிலும் சாகுபடி செய்வதில் எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இயற்கை முறையில் சாகுபடி செய்வதால், விவசாய நிலத்திற்கே வந்து வியாபாரிகள் புதினாவை வாங்கி செல்வதாகவும், இதனால் அதிகளவில் லாபம் கிடைப்பதாகவும் குருசாமி தெரிவித்துள்ளார்.
Discussion about this post