புதுக்கோட்டை மாவட்டத்தில் 54 கோடியே 66 லட்சத்தில் 44 ஆயிரத்து 442 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு ராணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், 7 ஆயிரத்து 747 மாணவ மாணவிகளுக்கு 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச மடிக்கணினிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.
Discussion about this post