மதுரையில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிமராமத்துப் பணிகளைத் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஆ.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பொய்கைக்கரைப்பட்டியில் உள்ள அழகர் கோவிலுக்குச் சொந்தமான தெப்பக்குளத்தில் நிரந்தரமாகத் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் அமைச்சர் வேலுமணியிடம் கோரிக்கை விடுத்தனர்.
Discussion about this post