முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தடுப்பூசி போட கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தடுப்பூசிக்கு பொதுமக்களிடம் தயக்கம் ஏற்படுவது வாடிக்கையானது என்று தெரிவித்தார். முன்களப் பணியாளர்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் தானும் சுகாதாரத்துறை செயலாளரும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கூறினார். அடுத்த வாரம் முதல் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தடுப்பூசி போட கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஓரிரு வாரங்களில் இதற்கு சாதகமான பதில் வரும் என்றும் கூறினார்.
Discussion about this post