வீட்டு வசதி திட்டங்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க உலகவங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 10 நாட்கள் அரசு முறைப்பயணமாக கடந்த 8ம் தேதி அமெரிக்கா சென்ற துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த துணை முதல்வரை, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்ட மூத்த நீர்வாகிகள் பூங்கொத்து வரவேற்றனர். விமான நிலையம் முன்பு குவிந்திருந்த தொண்டர்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர், அமெரிக்க வாழ் தமிழர்கள், தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளதாக கூறினார். தமிழக உள்கட்டமைப்பு வசதிக்காக 700 கோடி ரூபாய் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக துணை முதல்வர் கூறினார்.
பசுமை வழிச்சாலையில் உள்ள துணை முதல்வர் இலத்தில் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், சரோஜா மற்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பூங்கொடுத்து வரவேற்றனர்.
Discussion about this post