கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் அம்மா சாலை பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட 20 முக்கிய சாலைகளை இணைத்து கரூர் இரயில்வே சந்திப்பு முதல் தேசிய நெடுஞ்சாலை வரை அமைக்கப்படவுள்ள அம்மா சாலை பணிகளுக்கான பூமிபூஜை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து நடைபெற்று வரும், அம்மா சாலை அமைக்கப்படுவதற்கான பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
இந்த சாலை அமைக்கப்பட்டால், ஜவுளி உற்பத்தியாளர்கள், பிற தொழில்களில் ஈடுபடுவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.