கரூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அப்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட, மந்தை பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மரங்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்.
புவி வெப்பமயமாதலை தடுக்கவும், மழை பொழிவு பெறவும் அனைவரும் முன்வர வேண்டும் எனவும், மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி வரும்கால சந்ததியினருக்கு தெரிவிக்கவேண்டும் என கேட்டுகொண்டார். இதில் வாகை, வேம்பு, ஆலமரம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
Discussion about this post